Shocking News: “குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் அனுப்பிய டாக்டர்”….. மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்….!!!!


அசாம் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏழு மாத கர்ப்பிணி வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் சிவில் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணி பெண் கடுமையான பிரசவ வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மகப்பேறு மருத்துவர் டாக்டர் அஷிஷ்குமார் பிரசவம் பார்த்துள்ளார். அந்த பெண்ணுக்கு பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்யும்போது ஏழு மாதங்களான கரு என்பதால் மிகச் சிறிய அளவில் இருந்துள்ளது.

இதை பார்த்து அவர் மீண்டும் அந்த கருவை அப்பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ளார். புதன்கிழமை அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பின்னர் அதே மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அப்போதுதான் முழு கதையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி அவரது குடும்பத்தினர் அப்பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post Shocking News: “குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் அனுப்பிய டாக்டர்”….. மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.