சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இளம்பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி வேதனை அடைந்தார். சிங்கப்பூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் சிங்கப்பூரில் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். அந்த வீட்டின் உரிமையாளர் அந்த காதல் ஜோடியிடம் இந்த வீடுகளில் பேய்கள் இருப்பதாகவும் தாங்கள் அடிக்கடி தாய்லாந்துக்கு சென்று மாந்திரீகம் செய்து வருவதாக கூறியுள்ளார். இதனால் காதல் ஜோடிக்கு சிறிது பதட்டம் ஏற்பட்டது.
மேலும் இவர்கள் இருவரையும் அழைத்து அடிக்கடி மது விருந்து கொடுத்துள்ளார். அந்த உரிமையாளர் காதலனும் காதலியும் எப்போதும் நிர்வாணமாக தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படி தூங்கும் போது அந்த பெண்ணுக்கு ஒரு உருவம் முத்தம் கொடுத்துள்ளது. அவரது உடல் பகுதியை தொட்டுள்ளது. முதலில் தனது காதலன் என்று நினைத்துக் கொண்டிருந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தனது காதலனுக்கு வழுக்கை தலை இருக்கும். ஆனால் அந்த உருவத்திற்கு முடி அதிகம் இருந்தது.
இந்த சம்பவம் சுமார் ஒன்பது மாதங்கள் நீடித்தது. ஒருவேளை இது பேய் வேலையாக தான் இருக்குமோ என்று நினைத்து இருவரும் அச்சத்தில் இருந்தன. அதன் பிறகு தங்களது ரூமில் சிசிடிவி கேமராவை பொருத்தினர். நிர்வாணமாக தூங்குவதை விட்டனர். அதன் பிறகு தான் உண்மை என்ன என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதில் முதலில் கணவனும் மனைவியும் தூங்க சென்று விட்டனர். நள்ளிரவு 12:56 மணிக்கு ஒரு கை கதவை சுற்றி வந்து விளக்கை அணைத்தது,
கேமரா இரவு பார்வைக்கு சென்றது. வீட்டு உரிமையாளர் அறைக்குள் நுழைந்து அந்த பெண்ணை தொடுவதை பார்க்கலாம். மேலும் அவர் முத்தமிடுகிறார். ஆனால் இளம்பெண் முழுமையாக தூங்காததால் உடனடியாக எழுந்து உரிமையாளரை கையும் களவுமாக பிடித்துள்ளார். மேலும் அந்த பத்து நிமிடம் வீடியோவையும் சாட்சியாக நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post “இரவில் திடீரென தோன்றும் உருவம்”…. உடலில் கண்ட இடத்தில் தொட்டு….! சிசிடிவி காட்சியை பார்த்து மிரண்டு போன பெண்….!!!! appeared first on Seithi Solai.