ஆசிய கோப்பை போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி பந்து வீசிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை 2022 ஹாங்காங் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய நேற்றைய போட்டியில் நட்சத்திர பேட்டர் விராட் கோலி ஒரு ஓவரை வீசியதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். ஹாங்காங் இன்னிங்ஸின் 17வது ஓவரை விராட் கோலி வீசினார். ஆனால் விராட் கோலியால் எந்த விக்கெட்டையும் வீழ்த்த முடியவில்லை. இருப்பினும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார் கோலி.. விராட் கோலி பந்து வீசிய வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் முன்னாள் இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கிலும் 59 ரன்கள் எடுத்து சிறப்பாக செயல்பட்டார்.
6 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி நேற்று வீசியுள்ளார். கடைசியாக கோலி கடந்த மார்ச் 2016 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பந்து வீசினார். அந்த போட்டியில் கோலி 1.4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஹாங்காங்கை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2022 ஆசிய கோப்பையில் சூப்பர் 4 இடத்தைப் பிடித்தது இந்தியா..
#ViratKohli𓃵 bowling
pic.twitter.com/cQ8QSFEXop
— cricket lover (@cricket65469710) August 27, 2022
King bowling
#ViratKohli #INDvHK pic.twitter.com/AWtzBbvsOH
— CS (@_C_S___) August 31, 2022
The post 6 ஆண்டுக்குப்பின்…. “மீண்டும் பந்தை கையிலெடுத்த கோலி”….. ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள்..!! appeared first on Seithi Solai.