தமிழக பி.இ. பொது பிரிவு கலந்தாய்வு….. ஆன்லைன் முறையில் தேர்வு செய்ய வீடியோ வெளியீடு…… அரசு அதிரடி….!!!


தமிழகத்தில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படித்ததற்கான இணைய வழி கலந்தாய்வை தமிழக உயர்கல்வித்துறை சார்பில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான கலந்தாய்வில் 1.59 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். கல்லூரிகளில் 1.50 லட்சம் இடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு ஏற்கனவே நிறைவு பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவு தாமதமானதால் பொது பிரிவுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியாகிறது. எனவே பொது பிரிவுக்கான கலந்தாய்வு கூட்டம் 10 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டு நவம்பர் 13ஆம் தேதி முடிவடைகிறது. அதன்படி முதல் சுற்று செப்டம்பர் 10ஆம் தேதி, இரண்டாம் சுற்று செப்டம்பர் 25ஆம் தேதி, மூன்றாம் சுற்று அக்டோபர் 13ஆம் தேதி மற்றும் நான்காம் சற்று அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஒவ்வொரு சுற்றிலும் மாணவர்களின் தரவரிசைப்படி பங்கேற்க பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து நவம்பர் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை துணை கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன் பிறகு இணைய வழி கலந்தாய்வில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்ய 2 நாட்கள், தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்ய 2 நாட்கள், கல்லூரிகளில் சேர ஒரு வாரம் என்று 11 நாட்கள் ஒதுக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் கலந்தாய்வு நடைமுறைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் உயர்கல்வித்துறை சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தமிழக பொறியியல் கலந்தாய்வு செயற்கை குழுவின் www.tneaonline.org என்ற இணையதள இணைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே கலந்தாய்வுக்கு முன் மாணவர்கள் வீடியோக்களை பார்த்து, தங்களின் கலந்தாய்வு நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.