அசைக்க முடியாத அர்ப்பணிப்பு…. பூலித்தேவருக்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி..!!


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூலித்தேவனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாமன்னர் பூலித்தேவனின் 307 ஆவது பிறந்தநாள் விழா இன்று செப்டம்பர் 1ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் நெற்கட்டும்செவலில் இருக்கும் பூலித்தேவன் வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும், பல்வேறு இயக்கங்கள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு ராஜ்பவன் ட்விட்டர் பக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி,அவர்கள் விடுதலைப் போராட்ட வீரர் புலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தினார். சுதந்திரத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தேசத்திற்கான தன்னலமற்ற சேவைகள் அனைத்து தலைமுறைகளுக்கும் எப்போதும் ஊக்கமளிக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.