ALERT:ரயில் பயணிகளே… இந்த தப்பை மட்டும் செஞ்சுறாதீங்க… செஞ்சா சிறை தண்டனை கூட கிடைக்கும்…!!!!


நீண்ட தூரம் பயணம் செய்ய நினைப்பவர்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களை தேர்ந்தெடுத்து வருகின்றார்கள். பேருந்து மற்றும் விமானங்களை விட ரயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்ற காரணத்தினாலும் சௌகரியமான பயணம் செய்ய முடிவதாலும் ரயில் பயணங்கள் அதிக பேர் முன்பதிவு செய்து வருகின்றனர். ரயில் டிக்கெட் புக்கிங் செய்து பயணம் மேற்கொள்பவர்கள் அதில் உள்ள முக்கியமான விதிமுறைகள் பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அதாவது சில விதிமுறைகள் ரயில் பயணிகளுக்கு உதவியாகவும் சில விதிமுறைகள் கடுமையாகவும் இருக்கும் நிறைய பேர் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து அது கன்பார்ம் ஆகிவிட்டாலும் அந்த ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் அது விதிமுறைப்படி குற்றமாகும். அப்படி வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை வைத்து நீங்கள் பயணம் மேற்கொண்டு பிடிபட்டால் 250 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் இந்த அபராத தொகையை செலுத்தி விட்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கி பொது கோச்சில் பயணம் மேற்கொள்ள வேண்டும். ரயில் பயணத்தின் போது உங்களிடம் சரியான டிக்கெட் இல்லாவிட்டால் இந்திய ரயில்வே சட்டம் 138 பிரிவின் கீழ் ங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பிரிவின் கீழ் நீங்கள் பயணம் மேற்கொண்ட தூரத்திற்கு ரயில்வேயால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மற்றும் 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இது தவிர பயண சீட்டில் ஏதாவது ஏமாற்றம் செய்து பயணம் மேற்கொண்டால் ரயில்வே சட்டம் 137 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தண்டனைக்கு ஆறு மாதம் சிறை பத்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். அதனால் இந்த விஷயத்தில் பயணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.