விநாயகர் சிலைக்கு காவலாக இருந்த வாலிபர்…. மர்ம கும்பலின் வெறிச்செயல்….. செங்கல்பட்டில் பரபரப்பு….!!!!!


வாலிபர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த பரதபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் கண்ணா (22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டாடா மேஜிக் வாகனம் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய வீட்டின் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு இரவு நேர காவலாக ராஜேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் கார்த்திக் மற்றும் ஆல்பர்ட் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது வல்லம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் சிலர் ஒரு காரில் வந்து ராஜேஷ் கண்ணாவை கொடூரமான முறையில் வெட்டினர்.

இதை தடுக்க வந்த ஆல்பர்ட் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கும் அரிவால் வெட்டு விழுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே நாகராஜ் மற்றும் மர்ம‌ கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதன்பின் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேஷ் கண்ணா மற்றும் ஆல்பர்ட், கார்த்திக் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேஷ் கண்ணா பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன் பிறகு ஆல்பர்ட் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் விநாயகர் சிலை அருகிலேயே வாலிபர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.