கடந்த ஆண்டில் மட்டும்….. தினமும் சராசரியாக 86 கற்பழிப்புகள்…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!!!!


கடந்த வருடம் மட்டும் தினமும் சராசரியாக 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருக்கிறது என மத்திய அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் எனும் தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது கடந்த வருடத்தில் நாடு முழுவதும் 31,267 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகளவாக ராஜஸ்தான் மாநிலத்தில் 637 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேசம் 2,947 வழக்குகள், மராட்டியத்தில் 2,496 வழக்குகள், உத்தரப்பிரதேசத்தில்2,845 வழக்குகள், டெல்லியில் 1250 போன்றவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றது. அதேபோல பெண்களுக்கு எதிரான 4,28,278 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது மணிக்கு சராசரியாக 49 குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றது.

அதில் அதிக அளவில் உத்தர பிரதேசத்தில் மட்டும் 56 ஆயிரத்து 83 வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கற்பழிப்பு, கற்பழிப்பு கொலை, வரதட்சணை கொடுமை, ஆசிட் வீச்சு, தற்கொலைக்கு தூண்டுதல், கட்டாய திருமணம், ஆள்கடத்தல் போன்றவை இதில் அடங்குகின்றது. மேலும் கடந்த வருடம் நாடு முழுவதும் 52,947 இணைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது முந்தைய வருடத்தை விட 5% அதிகமாகும். இவற்றில் 70 சதவிகித இணைய குற்ற வழக்குகள் தெலுங்கானா, உத்தர பிரதேசம், கர்நாடகா மராட்டியம் போன்ற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்குகளில் 15 இணைய பயங்கரவாத வழக்குகளும் அடங்குகின்றது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.