இன்றைய காலகட்டத்தில் மதுப்பழக்கம் ஆண்கள் இடையே அதிகரித்துவிட்டது. ஒரு சில ஆண்கள் மது குடித்துவிட்டு தங்களுடைய குழந்தைகள் மற்றும் மனைவிகளை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குடிப்பழக்கம் காரணமாக கணவன் மனைவி இடையே சண்டை வருவதை பார்க்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இருப்பினும் ஒரு சில குழந்தைகள் தன்னுடைய தந்தைக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று வேறு சில முடிவுகளும் துணிச்சலாக எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் முஸ்தாபாத் நகரில் மூன்றாம் வகுப்பு சிறுவன் ஒருவன் தன்னுடைய தந்தையின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுங்கபதி பரத் என்ற அந்த சிறுவன் காவல் நிலையம் சென்று தன்னுடைய தந்தை மீது புகார் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே காவல் உதவி ஆய்வாளர் என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார். அதற்கு தன்னுடைய தந்தை தினமும் குளித்துவிட்டு தன் அம்மாவை அடிப்பதாகவும் தன்னால் சரியாக படிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுவனின் தந்தையை அழைத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பி உள்ளனர்.
The post எங்க அப்பாவ பிடிச்சி உள்ள போடுங்க சார்…. எதுக்கு தம்பி…..? சிறுவன் சொன்ன அதிர்ச்சி காரணம்….!!!! appeared first on Seithi Solai.