“6 கோடி தரலைன்னா புகைப்படத்தை வெளியிட்டுருவேன்”…. அமலாபாலுக்கு மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர்….. போலீசார் அதிரடி கைது….!!!!!


6 கோடி பணம் தரவில்லை என்றால் ஒன்றாக இருந்த பொழுது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் எனக் கூறி நடிகை அமலாபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த திரைப்பட தயாரிப்பாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அமலா பால். சென்ற 2014 ஆம் வருடம் இயக்குனர் ஏ.எல்.விஜய்-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2017 ஆம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர். இந்த நிலையில் சென்ற 2016ஆம் வருடம் திரைப்பட தொழில் மூலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பவ்நிந்தர்சிங் அவர்களுடன் அமலாபாலுக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நெருகி பழகி வந்தார்கள்.

இருவரும் சேர்ந்து 2018 ஆம் வருடம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டகுப்பம் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து திரைப்பட தொழில் நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். இதற்காக அமலாபாலிடம் அவர் 15 லட்சத்தை வாங்கி உள்ளார். மேலும் ஹெர்பல் பவுடர் நிறுவனம் தொடங்குவதற்கு 5 லட்சத்தை வாங்கியுள்ளார். இது தவிர்த்து வீட்டிற்கு முன் பணமாக 1.20 லட்சத்தை அமலாபால் கொடுத்துள்ளார். மேலும் இருவரும் திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்து கடாவர் என்ற திரைப்படத்தை அமலா பால் தயாரித்திருக்கின்றார். மேலும் இந்த படத்தில் அவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இப்படம் அண்மையில் ஓடிடியில் வெளியானது. இப்படத்தை தயாரிக்க அமலா பால் 3.75 கோடியை முதலீடு செய்துள்ளார். இத்திரைப்படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுதே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இதனால் பவ்நித்தர்சிங் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணத்தை வெளியிட தடை கேட்டு வழக்கு தொடர்ந்தார் ஆனால் அமலாபாலில் விளக்கத்தை கேட்டு நீதிமன்றம் திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்தது. தற்பொழுது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கின்ற நிலையில் பவ்நிந்தர்சிங், தனக்கு 6 கோடி தர வேண்டும் இல்லை என்றால் நாம் இருவரும் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என அமலாபாலுக்கு மிரட்டல் விடுத்திருக்கின்றார்.

இதனால் அமலாபால் தன் உதவியாளர் மூலம் விழுப்புரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் பவ்நிந்தர் சிங் மற்றும் அவரின் உறவினர்கள் உள்பட 12 பேர் தன்னை ஏமாற்றியதுடன் ஆறு கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்துகின்றார்கள். மேலும் தன்னுடைய பணம், சொத்துக்ககளை மோசடி செய்து வருவதாகவும் தனக்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் துன்புறுத்தல் செய்திருக்கின்றன. இதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் பவ்நிந்தர் சிங் உள்பட 12 பேர் மீது 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.