திருத்தணி முருகன் கோவில்….. “குடில்களில் அதிகாரிகளுக்கு தடபுடல் கறிவிருந்து”… பெருகும் கண்டனம்….!!!!


திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் கோவில் சூப்பிரண்டுகள் இருவருக்கு கறி விருந்து பரிமாறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி முருகன் வீடு இருக்கின்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதால் பக்தர்கள் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பாக இல்லத்தில் குடிகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இணையத்தில் இக்கோவில் சார்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் இருப்பதாவது, அரக்கோணம் சாலையில் இருக்கும் கார்த்திகேயன் குடில்களில் கோவில் சூப்பிரண்டுகள் கலைவாணன், வித்யாசாகர் உள்ளிட்ட இருவருக்கும் மட்டன், சிக்கன், முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளை கோவில் ஊழியர்கள் பரிமாறுகின்றார்கள். அதை இருவரும் ருசித்து சாப்பிடுகிறார்கள்.

இந்த வீடியோவிற்கு முருக பக்தர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கோவில் சூப்பிரண்டுகளுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றார்கள். பக்தர்கள் தங்குகின்ற அறைக்கு சைவத்தை தவிர மற்ற உணவுகளுக்கு அனுமதி இல்லாததை தெரிந்தும் ஊழியர்களே இப்படி செய்த நிலையில் இந்து அற நிலையத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

The post திருத்தணி முருகன் கோவில்….. “குடில்களில் அதிகாரிகளுக்கு தடபுடல் கறிவிருந்து”… பெருகும் கண்டனம்….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.