ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்… இதுதான் காரணமா…? அதிர்ச்சி சம்பவம்…!!!!!


ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தின் துங்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபி கந்தம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில் சமீபத்தில் தேர்வு நடைபெற்று இருக்கின்றது. அதில் செய்முறை தேர்வில் ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண் வழங்கிய காரணத்தினால் ஆத்திரமடைந்த மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றார். ஆனால் அதற்கு சரியாக பதிலளிக்காததால் குறிப்பிட்ட பாட ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கியிருக்கின்றனர். மேலும் தேர்வில் தோல்வி பெற வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதாகவும் அந்த மாணவர்கள் புகார் தெரிவித்து இருக்கின்றனர். ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வீடியோவில் மேலும் பல பள்ளி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குவதையும் காணமுடிகின்றது. இதற்கிடையே இந்த மாணவர்கள் உண்மையில் தேர்வில் தேர்ச்சி பெற தகுதியானவர்களா அல்லது ஆசிரியர்கள் வேண்டுமென்றே அவர்களை தோல்வியடைய செய்தனரா என்ற தகவல் தெரியவில்லை. இது பற்றி பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் கூறிய போது மாணவர்கள் கூட்டம் நடத்துவதாக கூறி எங்களை அழைத்து சென்று மதிப்பெண்கள் குறைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மாணவர்களின் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் முடிவுகளில் சேர்க்கப்படாததால் இது நடைபெற்றுள்ளது. அதை தலைமையாசிரியர் தான் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றி தும்கா மாவட்டம் கோபி கந்தர் தொகுதி கல்வி விரிவாக்க அலுவலர் சுரேந்திர ஹெப்ராம் பேசியபோது இந்த சம்பவம் குறித்த தகவலை பெற்றவுடனே அனைத்து ஆசிரியர்களும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு ஆனால் மாணவர்களிடம் விசாரணை செய்த போது செய்முறை தேர்வில் தங்களுக்கு மிக குறைவான மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும் ஆசிரியர்களிடம் இருந்து போதுமான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.