“சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல்”…. படப்பிடிப்பு எப்போது தெரியுமா….? வெளியான தகவல்…!!!!!!!


சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் ஜல்லிக்கட்டு போல செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்றதில் சூர்யா, வெற்றிமாறன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது விரைவில் ஆரம்பமாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்பொழுது டிசம்பர் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.

சூர்யா தற்பொழுது வணங்கான், சூர்யா 42 உள்ளிட்ட திரைப்படங்களின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கின்றார். டிசம்பர் மாதத்திற்குள் கிட்டத்தட்ட படப்பிடிப்பை முடித்து விடுவார். மேலும் சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பில் வெற்றிமாறன் தற்பொழுது பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post “சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல்”…. படப்பிடிப்பு எப்போது தெரியுமா….? வெளியான தகவல்…!!!!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.