அடடே சூப்பர்… 3,425 மணல் லட்டுக்கள் கொண்டு விநாயகர் சிலை… மணல் சிற்பக் கலைஞரின் அசத்தல் புகைப்படம்..!!!!!


நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒடிசாவில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் உள்ள கரையோர மணலை பயன்படுத்தி மிகப்பெரிய மணல் லட்டு விநாயகர் சிலையை வடிவமைத்திருக்கிறார். இந்த சிலையை செய்வதற்கு பூக்கள் மற்றும் 3425 மலர் லட்டுக்களை சுதர்சன் பயன்படுத்திருக்கின்றார். இந்த நிலையில் இந்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post அடடே சூப்பர்… 3,425 மணல் லட்டுக்கள் கொண்டு விநாயகர் சிலை… மணல் சிற்பக் கலைஞரின் அசத்தல் புகைப்படம்..!!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.