பிரசித்தி பெற்ற கோவிலின் மேற்கூரையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட இருக்கிறது.
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் நடை வருகிற 6-ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் கோயிலின் கருவறைக்கு மேலே அமைந்துள்ள தங்கக் கூரையில் 13 இடங்களில் மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்படுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்க கூரையை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணிகளை பிபி ஆனந்தன் ஆச்சாரி தலைமையிலான குழு செய்து கொண்டிருக்கிறது.
இந்த பணியை 3 நாட்களுக்குள் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். ஏனெனில் ஓணம் பண்டிகை வருவதால் 3 நாட்களுக்குள் பணிகளை முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தேவஸ்தான தலைவர் கூறியுள்ளார். மேலும் சீரமைப்பு பணிகளை ஐகோர்ட் மேற்பார்வை அதிகாரி குருப், செயல் அதிகாரி கிருஷ்ணகுமார், செயற்பொறியாளர் ரஞ்சித் சேகர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுப்பிரமணியம், கமிஷனர் பைஜூ மற்றும் தலைமை இன்ஜினியர் அஜித் குமார் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.
Post Views:
0