“25 அரசு நிறுவனங்கள்” ஒரே இடத்தில் கூடும் பயனுள்ள நிகழ்ச்சி…. தமிழ் மக்களுக்கு அழைப்பு….!!!!!

ஒரே இடத்தில் 25 அரசு நிறுவனங்கள் கூடும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

சுவிட்சர்லாந்து நாட்டில் செயல்படும் 25 அரசு நிறுவனங்கள் ஒரே இடத்தில் கூடும் நிகழ்ச்சியை ஒரு சமூக சேவை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி என்பது அரசு அதிகாரிகள் மக்களுக்கின் வாழ்க்கை தரத்துக்கு வேண்டிய பயனுள்ள தகவல்களை கூறுவார்கள். இந்த நிகழ்ச்சியானது வருகிற சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை நிகழ்ச்சியை நடத்தும் தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி 25 அரசு நிறுவனங்கள் கூடும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மக்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் குழந்தைகளும் பராமரிக்கப்படுவதோடு, அவர்களுக்கு வேண்டிய தேநீர், உணவு பொருட்கள், குளிர்பானங்கள் போன்றவையும் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழ் மக்களுக்கு மொழிபெயர்ப்பு பிரச்சனை, வளர்ந்தோருக்கான கல்வி, வேலை இழப்பு பிரச்சனை மற்றும் நிதி பிரச்சனை போன்றவைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படுவதோடு, தமிழ் மக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விடை அளிக்கப்படும். மேலும் தமிழ் மக்கள் கண்டிப்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு இணையர் நந்தினி முருகவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.