விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகையை ஒட்டி பூ மற்றும் பழங்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் கடந்த 25ம் தேதி முதல் சிறப்பு சந்தை திறக்கப்பட்டு பொருட்கள் விற்பனையாகி வந்தன. கரும்பு ,வாழைக்கன்று, விளாம்பழம் , அருகம்புல் ,கம்பு ,சோளம், மாவிலை தோரணங்கள் மற்றும் பழவகைகள் ஆகியவை வேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஒரு கிலோ மல்லிகை 1000 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. முல்லை கிலோ ரூ. 500க்கும் , சம்பங்கி கிலோ ரூ. 150க்கும் , ரோஜா கிலோ ரூ. 160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூ மற்றும் பழங்களில் விலை அதிரடியாக உயர்ந்து மாநிலம் முழுவதும் நம்பமுடியாத விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
The post அதிர்ச்சி…! மக்களே பூ, பழம் வாங்க போறீங்களா….? நம்ப முடியாத அளவு உயர்வு….!!!! appeared first on Seithi Solai.