இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் தொடக்கம்…. மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்….!!!


இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகளை அமைவதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்திய தொழில்நுட்ப கல்வியை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகளை தொடங்குவது தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அறிக்கையை தற்போது ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் வெளிநாடுகளில் தொடங்கப்படும் ஐஐடிகளுக்கு இந்திய சர்வதேச தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐஐடி) என பெயரிட வேண்டும்.

இந்நிலையில் ஐஐடி நிறுவனங்கள் தனித்தோ அல்லது கூட்டாகவும் சேர்ந்து ஐஐஐடி-ஐ தொடங்கலாம். இந்த ஐஐஐடி நிறுவனங்களை நிர்வகிக்க தேவைப்படும் நிதி ஆதாரத்தை கணக்கில் கொண்டு மாணவர் சேர்க்கையை நிர்ணயித்துக் கொள்வதோடு, இந்திய மாணவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதனையடுத்து ஐஐடி நிறுவனங்களில் பணியாற்றும் திறமையான ஆசிரியர்கள் மூலம் தற்காலிகமான முறையில் ஐஐஐடி யில் பாடங்கள் நடத்தப்படும்.

இந்திய ஐஐடி நிறுவனங்களை தங்கள் நாடுகளில் தொடங்குவதற்கு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை ஐஐடி நிறுவனம் இலங்கை, தன்னாசியா, நேபாளம் போன்ற நாடுகளில் கிளைகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தொழில்நுட்ப கல்வியின் கிளையை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பாதியிலேயே பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.