அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரூ. 4000 போனஸ்…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!


அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இன்று தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஓணம் பண்டிகை கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையை முன்னிட்டு மாநில முதல்வர் பினராயி விஜயன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 4000 போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போனஸ் பெற தகுதி இல்லாத ஊழியர்களுக்கு 2750 உதவித்தொகையாக வழங்கப்படும்.

அதன் பிறகு அனைத்து அரசு ஊழியர்களும் 20 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வழங்கப்படும். இந்த முன் பணம் மாதம் தோறும் தவணை முறையில் வழங்கப்படும். இதனையடுத்து ஓய்வூதியதாரர் களுக்கு 1000 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என்று அறிவித்ததோடு, பகுதி நேர மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு முன்பணமாக 6000 ரூபாய் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.