“கடன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட கும்பல்”… மேலும் ஒருவர் அதிரடி கைது…. போலீசார் வலைவீச்சு…!!!!!!


தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கூறைநாட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தின் பெயரை கூறி தனி நபர் கடன் வாங்கித் தருவதாக ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே இருக்கும் வெண்ணங்குடியை சேர்ந்த சஞ்சய், சித்தார்த்தன், சையது அப்துல்லா உள்ளிட்ட மூன்று பேரை ஏற்கனவே கைது செய்த நிலையில் தற்பொழுது அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே இருக்கும் வெண்ணங்குடியைச் சேர்ந்த அமர்நாத் என்பவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தார்கள். மேலும் அவரிடம் இருந்த 5 லட்சம், 15 செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தார்கள். இந்த மோசடி வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றார்கள்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.