கூட்டு இராணுவ போர் பயிற்சி… பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு…!!!!!


இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகள் பங்கேற்கும்  கூட்டு ராணுவம் பயிற்சி வரும் ஒன்றாம் தேதி தொடங்கி ஏழாம் தேதி வரை நடைபெற இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது ரஷ்யாவின் கிழக்கு ராணுவ பிரிவின் தலைமையில் நடைபெறும். இந்த கூட்டு ராணுவ போர் பயிற்சியில் பல்வேறு விதமான போர் உத்திகள் பற்றி பயிற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 7-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் இந்த போர் பயிற்சி ஜப்பான் ஓஹோட்ஸ்க் கடல் பகுதிகளில் ஏழு சுற்றுகளாக நடத்தப்படுகின்றது. இதில் 140 போர் விமானங்கள் 60 போர்க்கப்பல்கள் துப்பாக்கிப் பொருந்திய படகுகள் துணை படகுகள் உள்ளிட்ட 5000 ராணுவ தளவாடங்கள் ஈடுபடுத்தப்பட இருக்கின்றது. மேலும் இந்த பயிற்சியில் இந்தியா, சீனா, லாவோஸ், மங்கோலியா, நிகரகுவா, சிரியா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்க இருக்கின்றது என அதில் கூறப்பட்டிருக்கிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.