தஞ்சை மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைமேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர் ரம்யாசரவணன் (தி.மு.க.) பேசியது, அண்ணாநகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு இயற்பியல் ஆய்வுக்கூடம், கூடுதல் வகுப்பறை கட்டிடம், தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்புகளும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகட்டிடமும் கட்ட நிதி ஒதுக்கிய மேயர், துணை மேயர், ஆணையருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் (அ.தி.மு.க.) பேசியது, திருவையாறு பஸ்நிறுத்த வணிகவளாகத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு, நான்குசக்கர வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டில் உள்ளதா?. தெருவிளக்குகள்எரியவில்லை. ஒப்பந்த தூய்மைபணியாளர்களுக்கு சம்பளம் வழங்கி 2 மாதம் ஆகிறது என்று கூறினார்.
அதன்பிறகு பேசிய கண்ணுக்கினியாள் (அ.ம.மு.க.) , பூக்காரத்தெரு பூச்சந்தையை வேறு இடத்திற்கு கொண்டு செல்லாமல் அங்கேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனையடுத்து பேசிய ஆணையர் சரவணகுமார், பூச்சந்தை இருக்குமிடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. சாலைவிரிவாக்கத்துக்காக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அந்த இடத்திலேயே பூச்சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுஎன்று கூறினார். அதனை தொடர்ந்து கோபால் (அ.தி.மு.க.) கூறியது, தஞ்சை மாநகராட்சியில் பல இடங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. காமராஜர் மார்க்கெட் காய்கறிகடைகளை தாமதமாக ஏலமிட்டதன் மூலம் மாநகரட்சிக்கு ரூ.1கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதுஎன்று தெரிவித்துள்ளார. காந்திமதி (அ.தி.மு.க.) கூறியது, கீழஅலங்கத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் 12 பேர் வசிக்கும் வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அவர்களுக்கு வல்லம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்க வேண்டும். வெள்ளைப்பிள்ளையார்கோவில் ரவுண்டானா முதல் சரபோஜி மார்க்கெட் வரையிலான சாலையை சீரமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து ஜெய்சதீஷ் (பா.ஜ.க.) கூறியது, பாதாளசாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறினார். செரீப் (இந்திய யூனியன் முஸ்லிம்லீக்) கூறியது, கண்காணிப்புகேமரா பொருத்தவேண்டும் என்று தெரிவித்தார். சரவணன் (அ.தி.மு.க.) கூறியது, சேவப்பநாயக்கன்வாரி வடகரை 1-வது தெரு உள்ளிட்ட 3 தெருக்களில் ஜல்லி கொட்டப்பட்டு சாலை போடப்படாமல் உள்ளது. உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டும் என்று கூறினார். இவ்வாறு அவர்கள் அனைவரும் கூறினார்கள். இதற்கு பதில் அளித்து பேசியமேயர் சண். ராமநாதன், “திருவையாறு பஸ்நிறுத்த வணிகவளாகத்தில் உள்ள இருசக்கர, நான்குசக்கர வாகன நிறுத்துமிடம் தற்போது இலவசமாக வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளது. தீபாவளிபண்டிகை வரை இந்தநிலை தொடரும். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவுசெய்யப்படும். விரைவில் காமராஜர்மார்க்கெட், சிவகங்கைபூங்கா ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்”என்று தெரிவித்துள்ளார்.
Post Views:
0