கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், கோயம்பேடு வணிக வளாகம், CMRTS பறக்கும் ரயில் திட்டம், வெளிவட்ட சாலை, மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் ஆகியவற்றை வெற்றிகரமாக CMDA செயல்படுத்தியுள்ளது. இது தலைநகர் சென்னை மற்றும் அதன் நகர் புறங்களில் வளர்ச்சிக்கான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு முகமையாக செயல்பட்டு வருகிறது. இதனை அடுத்து அடுத்த கட்டமாக கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது மட்டும் இன்றி சென்னையின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை கொண்டு வரவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சிஎம்டிஏ தற்போது மாஸ்டர் பிளான் ஒன்றை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக சென்னை வாசிகள் 15 நிமிடங்களில் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற முடியும். அதாவது மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், அலுவலகங்கள், பொது போக்குவரத்து என எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அவற்றை விரைவாக பெற முடியும். அதற்கு ஏற்ப நகரில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது. இதனை வரும் 2046 ஆம் வருடத்திற்கு நிறைவேற்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
Post Views:
0