கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாம்பழப்பட்டு சாலையில் ரகுமான் என்பவருக்கு சொந்தமான பட்டாணி கடை மற்றும் பொறி மொத்த குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் இருந்து பொரி, கடலை, பட்டாணி, சிப்ஸ் போன்ற பொருட்களை தயார் செய்து பல்வேறு சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர். நேற்று முன்தினம் திடீரென குடோனில் இருந்து கரும்புகை வெளியேறுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
Post Views:
0