நூதன முறையில் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை திருடி சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு டவுன் பகுதியில் லட்சுமி என்பவர் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்த ஒருவர் கோழி இறைச்சி கிலோ எவ்வளவு என்று கேட்டுள்ளார். சிறிது நேரத்தில் அந்த நபர் நீங்கள் அணிந்திருக்கும் தங்க சங்கிலியின் மாடல் அழகாக இருக்கிறது. அதனை தந்தால் பக்கத்து கடையில் காய்கறி வாங்கி கொண்டிருக்கும் எனது மனைவியிடம் காண்பித்து விட்டு திரும்பி தருவேன் என கூறியுள்ளார். இதனை நம்பிய லட்சுமி தான் அணிந்திருந்த 3 1/2 பவுன் தங்க சங்கிலியை அந்த நபரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த நபர் திரும்பி வரவில்லை. இதனால் தான் மாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமி ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post Views:
0