மாணவி தரப்பு கோரிக்கை நிராகரிப்பு…! கடும் நடவடிக்கை எடுக்க…. ஐகோர்ட் நீதிபதி உத்தரவு …!!


கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவர் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு  இன்றைய தினம் வந்த போது, தமிழக அரசின் சிபிசிஐடி தரப்பின் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞசர் முகமது ஜின்னா ஆஜராகி, மூன்று அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும்,  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் விசாரணை அறிக்கைகளையும்,  தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா,

விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருப்பதாகவும், நேற்று முன்தினம் மாணவினுடைய தாய் முதலமைச்சரை சந்தித்து பேசி இருப்பதாகவும்,  மாணவியின் தாயிடம் பேசிய முதலமைச்சர், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் மனுதாரர் தெரிவிக்கும் அச்சம் உட்பட அனைத்து  தரப்புகளிலும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜிப்மர் ஆய்வு அறிக்கை மற்றும் விசாரணை குறித்து அறிக்கை மனுதாரருக்கு வழங்க மறுத்த நீதிபதி, மாணவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மருத்துவ குழுக்கள் நியமிப்பதற்காக அரசுக்கு பாராட்டும் தெரிவித்து, இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்தி பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.