அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மருமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பாஸ்கரன். இவரின் மகள் சுமதி மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோர் அவர்களது இரு குழந்தைகளுடன் மதுரை கருப்பாயூரணி அருகே ஒத்தப்பட்டி பகுதியில் வசித்துவந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை சரவணன் தன் அறையில் தூக்கிட்டு நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து சரவணன் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post முன்னாள் அமைச்சர் மருமகன் தூக்கிட்டு தற்கொலை….. பகீர் சம்பவம்…. காரணம் என்ன….???? appeared first on Seithi Solai.