தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாத நிலையில் புதிதாக வரி ஏதும் விதைக்கப்படாத நிலையில் வடமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதாக கூறி பருப்பு, எண்ணெய், காய்ந்த மிளகாய், மல்லி உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் பிஸ்கட், சோப்பு,ஷாம்பு உள்ளிட்டவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதாக வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் பதுக்களை இரும்பு கரம் கொண்டு தடுக்க தவறினால் அத்தியாவசிய பொருள்களின் விலை மேலும் உயரக்கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் ஒரு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட காய்ந்த மிளகாய் ஒரே மாதத்தில் 140 ரூபாய் அதிகரித்து தற்போது 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது சுமார் 78 சதவீதம் விலை ஏற்றம் ஆகும். அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருளான காய்ந்த மிளகாய் விலை உயர்ந்தது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.குறைவான விளைச்சல் நேரத்தில் காய்ந்த மிளகாய் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
Post Views:
0