“மது அருந்திவிட்டு ரோட்டில் தள்ளாடிய பள்ளி மாணவர்கள்”…. சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்….!!!!!


பள்ளி மாணவர்களுக்கு மதுபாட்டில்கள், போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்டவற்றை தடுத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மது கடைகள் தற்பொழுது திறக்கப்படுவதற்கு முன்பாக சில மதுபானக்கூடங்களில் இருந்து மது பாட்டில்கள் சட்ட விரோதமாக பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சொல்லப்படுகின்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு சிலர் மது விற்பனை செய்ததாக தெரிகின்றது.

சென்ற 25 ஆம் தேதி காலை பள்ளி மாணவர்கள் சீருடை இருந்த நிலையில் இரண்டு பேரும் பள்ளிக்கு செல்லாமல் பெரம்பலூரில் இருக்கும் ஒரு மதுபான கடை அருகே மதுபான கூடத்தில் இருந்து ஒருவரிடம் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்று மது அருந்தினார்கள். மேலும் புகையும் பிடித்தார்கள்.

இதையடுத்து போதையில் தள்ளாடியபடி அவர்கள் நகர் பகுதியில் வலம் வந்தார்கள். இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருட்கள், மது விற்பனை உள்ளிட்டவற்றை தடுத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.