மீனம் ராசிக்கு…! அனுசரனை தேவை..! சேமிப்பு கிடைக்கும்..!!


மீனம் ராசி அன்பர்களே…! விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நாளாக இருக்கும்.

சேமிப்பு பணம் செலவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவீர்கள். வீட்டுத் தேவைக்காக சேமிப்பு பணம் கொஞ்சம் கரையக் கூடும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவேண்டும். தொழில் கூட்டாளிகளால் தொல்லை கொஞ்சம் இருக்கும். சில நபரிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். தொழில் காரணமாக சிலர் தூரதேச பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

யாரிடமும் கவனமாக பார்த்து பழக வேண்டும். தொழில் இல்லாமல் இருப்பவர்கள் சிறிய பணத்தில் தொழில் தொடங்க உண்டாகும். பண்டிகை காலம் என்பதால் சிரமமெடுத்து எதையாவது செய்யுங்கள். நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். அலைச்சல் கொஞ்சம் இருக்கும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். இட மாற்றம் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணை வழியே நல்ல முன்னேற்றம் தகவல் இருக்கும்.

மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கவனமாக கலவியில் ஈடுபடவேண்டும்.  பாடத்தை திரும்பி எழுதிப் பார்க்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுதுஅடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு.
அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 7.
அதிர்ஷ்ட நிறம் அடர் நீலம் மட்டும் மஞ்சள் நிறம்.

The post மீனம் ராசிக்கு…! அனுசரனை தேவை..! சேமிப்பு கிடைக்கும்..!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.