“விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி”…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து வெளியான அப்டேட்….!!!!!


விஷால் நடிப்பில் உருவாகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டுகின்றார். இந்த படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றது.

தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரித்து வர்மா இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தில் எழுபதுகளில் இருந்தது போல சென்னை மவுண்ட் ரோடு செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகும் என படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.