தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம்… வசூலில் முன்னேற்றம்…!!!!!


யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ் இயக்குனர் பாரதிராஜா போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் பதினெட்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறது. இந்த சூழலில் படம் வெளியான முதல் நாள் உலக அளவில் 9.52 கோடியும் இரண்டாவது நாள் 8.79 கோடியும் வசூலித்ததாக கூறப்படுகின்றது. மேலும் முதல் வாரம் மட்டும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் 51.42 கோடி வசூலித்து இருக்கின்றது. இரண்டாவது வாரத்தின் முதல் நாள் 3.47 கோடியும் இரண்டாவது நாள் 4.61 கோடியுடன் வசூலில் முன்னேற்றம் காணும் இந்த படம் தற்போது வரை 59.50 கோடி வரை வசூலித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

The post தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம்… வசூலில் முன்னேற்றம்…!!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.