“ரசிகர்களின் தொல்லையால் நான் மதுவிற்கு அடிமையானேன்”… பிரபல நடிகை ஓபன் டாக்…!!!!!!


தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தேஜஸ்வி மடிவாடா. இவர் தமிழில் நட்பதிகாரம் 79 எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலம் அடைந்துள்ளார். தற்போது கமிட்மென்ட் என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் தேஜஸ்வின் வாய்ப்பிற்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் சினிமா மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் இருக்கிறது எனவும் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் தனக்கும் பாலியல் அழைப்புகள் வந்தது என கூறியிருந்தார்.

இந்த நிலையில் தேஜஸ்வி இரண்டு வருடங்களாக போதை பழக்கத்தில் அவதிப்பட்டதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் தெலுங்கு நடிகர் கவுசலின் ரசிகர்களின் தொல்லையால் நான் மதுவிற்கு அடிமை ஆனேன். பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக நான் பங்கேற்றபோது கவுசலின் ரசிகர்கள் என்னைப் பற்றி ஆபாசமான தகவல்களை பரப்பியுள்ளனர். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அதிலிருந்து மீள்வதற்காக நான் குடிக்க ஆரம்பித்தேன். இதனால் உடல் நலம் குன்றி பின் அதிலிருந்து மீண்டேன் என தெரிவித்துள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.