திடீரென மன்னிப்பு கேட்ட நடிகர் ரஜினி… அறிக்கையில் என்ன இருக்கிறது…? ஆவளுடன் காத்திருக்கும் மக்கள்…!!!!!!


ரஜினியை பொறுத்தவரை செயல்பாடுகள் எப்படி இருந்தாலும் அவரது வாயிலிருந்து உதிர்ந்து விழும் வார்த்தைகள் கொஞ்சம் உக்கிரமாகவே இருக்கும். இதனாலே ரஜினி அடிக்கடி சர்ச்சைககளில் சிக்கிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகின்றது. ஜெயலலிதா கருணாநிதி மறையும் வரை அமைதியாக இருந்துவிட்டு தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என வாயை கொடுத்து அதிமுகவினரிடம் வாங்கி கட்டியுள்ளார். இதன்பின் பழுதடைந்து கிடக்கும் சிஸ்டத்தை தன்னால் மட்டுமே சரி செய்ய முடியும் என கூறிய ரஜினியிடம் பத்திரிக்கையாளர்கள் கொள்கைகள் பற்றி கேள்வி கேட்டதும் தலை சுற்றி போய் கட்சி தொடங்கும் எண்ணத்தையே விட்டுவிட்டு போயஸ் தோட்டத்தில் தியானத்தில் இறங்கி விட்டார். இதற்கிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கடந்த 2018 ஆம் வருடம் பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் சிக்கி 2 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் நூறுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிமுக ஆட்சிக்கு கரும்புள்ளியாகவே அமைந்ததாக விமர்சனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அரங்கேறிய போது தூத்துக்குடிக்கு விரைந்த ரஜினி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததால் தான் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் எனக் கூறியுள்ளார். இதற்கிடையே துப்பாக்கி சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை முடக்கிவிடப்பட்டது. அதன்படி விசாரணைக்கு பின் ஆணையம் கடந்த மே மாதம் 18ஆம் தேதி தனது அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அளித்துள்ளது. சுமார் 300 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் என்னென்ன பரிந்துரைகள் இருக்கிறது என்பது பற்றி இன்னும் தமிழக அரசு வெளியிடவில்லை.

இந்த சூழலில் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் உள்ளதாக முன்னணி ஆங்கில இதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த விசாரணையின் போது நடிகர் ரஜினி சமூக விரோதிகள் என உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என கேட்டதாகவும் இதனை கேட்ட விசாரணை ஆணையம் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள நீங்கள் பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்ததை ஏற்க முடியாது. மேலும் இதற்கு மக்கள் எதிர்வினை காட்டி இருந்தால் பின் விளைவுகள் வேறு மாதிரி ஆயிருக்கும். இனி இதுபோன்று பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்து அனுப்பியதாகவும் தற்போது தகவல்கள் வெளியாக இருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை தமிழக அரசு விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளியிட்டால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் பலரும் அதற்காக காத்திருக்கின்றார்கள்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.