ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு இவ்வளவு கோடி முதலீடா?…. ஜப்பான் எடுத்த அதிரடி முடிவு….!!!!


ஆப்பிரிக்க வளர்ச்சிக்கான 8-வது டோக்கியோ சர்வதேச மாநாடு துனிசியா நாட்டில் சென்ற ஆகஸ்டு 25-ஆம் தேதி முதல் 29-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இவற்றில் ஜப்பானிய பிரதமரான புமியோகிஷிடா ஆன்லைன் மூலம் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது, மனித வளங்களில் முதலீடு, வளர்ச்சிக்கான தரம் போன்ற துறைகளில் ஜப்பான்அரசானது பெரும் கவனம் செலுத்துகிறது. எனவே ஜப்பான்அரசு மற்றும் வர்த்தகர்கள் கூட்டாக ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு அடுத்த 3 வருடங்களுக்கு ரூபாய்.2.39 லட்சம் கோடியை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்கிடையில் ஆப்பிரிக்கா ஓர் இளமையான, நம்பிக்கையான மற்றும் பன்முக தன்மை கொண்ட கண்டம் ஆகும்.

ஆப்பிரிக்கா உடன் இணைந்து வளர்ச்சி அடைவதற்கான ஒரு நட்புநாடாக மாற ஜப்பான் விரும்புகிறது என பிரதமர் புமியோகிஷிடா தெரிவித்துள்ளார். நிதி முதலீட்டின் ஒருபகுதியாக, பசுமை தொழில் நுட்பங்களின் வளர்ச்சிக்காக ரூபாய்.31,980 கோடி செலவிடப்படும். ஆப்பிரிக்க நாடுகள் கடன் நிலையிலிருந்து மேம்படுவதற்கான சீர்திருத்தங்களுக்கு ரூபாய்.39,980 கோடி நிதி செலவிடப்படும். ஸ்டார்ட் அப்களுக்கு ஆதரவாக, 3 லட்சம் பேரை தொழில்துறை, சுகாதாரநலம், கல்வி மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் நிபுணர்களாக ஆக்குவதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் இந்த நிதி செலவிடப்படும் என்று கூறியுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளின் உணவு உற்பத்தி திட்டத்துக்கு வலு சேர்க்கும் அடிப்படையில் ரூபாய்.2,399 கோடி கடனாக வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.