கடலின் அடியில் கன்னி வெடிகளை அழிக்கும் ட்ரோன்கள்…. உக்ரைனுக்கு அளித்த பிரிட்டன்…!!!


பிரிட்டன் அரசு, கடலின் அடியில் பயன்படுத்தக்கூடிய ஆறு ஆளில்லா ட்ரோன்களை உக்ரைனுக்கு அளித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் நாட்டிற்கு கடற்கரை ஓரத்தில் இருக்கும் கன்னிவெடிகளை அழிப்பதற்காக கடலின் அடியில் உபயோகப்படுத்தப்படும் ட்ரோன்களை கொடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் தொடங்கப்பட்டதிலிருந்து பிரிட்டன், உக்ரைன் நாட்டிற்கு பல நிதி உதவிகள் மற்றும் ராணுவ உதவிகளை அளித்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது கடலின் அடியில் இருக்கும் கன்னிவெடிகளை அழிக்கக்கூடிய ஆறு ஆள் இல்லா ட்ரோன்களை வழங்கியிருக்கிறது. இவை ஆழமில்லாத கடலோரங்களில் உபயோகிக்க குறைந்த எடை உடைய தன்னாட்சி வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இவற்றால், சுமார் 100 மீட்டர் ஆழம் வரை இயங்கி சென்சார்களுடன் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கவும் அதனை அடையாளம் கண்டு அழித்துவிடவும் முடியும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.