“விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல்”…. போலீசார் பேச்சுவார்த்தை…!!!!!!


விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தியான் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது மகனுடன் ஆடுகளை மேய்த்துக்கொண்டு திருச்சி-சிதம்பரம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றார். அப்பொழுது அவ்வழியாக வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில் உடன் வந்த மகன் பாலமுருகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இதைத்தொடர்ந்து போலீசார் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த நிலையில் நேற்று செந்தில்குமாரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்திற்கு காரணமான காரை பறிமுதல் செய்து காரின் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என செந்தில்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கூடாது என மருத்துவமனை முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது போலீசார் கூறியதாவது, விபத்துக்கு காரணமான வாகனம் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு விட்டதாகவும் விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்த பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றார்கள்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.