முதல்வர் சொன்னதை நிறைவேற்றிய மாநகராட்சி மன்ற உறுப்பினர்….. அப்படி என்ன செய்தார் தெரியுமா? வெளியான தகவல்…..!!!!


தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்கு வசதியாக வீடுகள் தோறும் குப்பை தொட்டிகள் வழங்கும் படியும், போதை பொருட்களுக்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பணியும் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி கடலூர் மாநகராட்சி மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் தலைமை தாங்கினார். அவர் ஒவ்வொரு வீட்டிற்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்கு வசதியாக தலா 2 குப்பை தொட்டிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து போதை பொருட்கள் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதுமட்டுமில்லாமல் அவரது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் புகையிலைப் பொருட்கள் எங்க விற்பனை செய்தாலும் தனக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் அறிவித்ததை போல போதை பொருள் இல்லாத மாமன்ற வார்டாக தனது வார்டை மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து மாநகராட்சியில் இருந்து குப்பைகளை சேகரிக்கும் வண்டிகள் வரவழைக்கப்பட்டு வீடுகளில் வைக்கப்பட்டிருந்த குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.