கன்னடத்தில் முதன் முதலில் களத்தில் இறங்கும் விக்ரம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற 31ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொண்டு பிஸியாக இருந்து வருகிறார். அதனை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாக படம் ஒன்றில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை லூசியா மற்றும் யு-டர்ன் போன்ற படங்களை இயக்கிய கனடா இயக்குனர் பவன் குமார் இயக்குவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த செய்தி உறுதியானால் விக்ரம் கன்னட திரையுலகில் எண்ட்ரியாகும் முதல் படமாக அமையும்.

The post கன்னடத்தில் முதன் முதலில் களத்தில் இறங்கும் விக்ரம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.