உங்கள் வீட்டில் நாய், பூனை வளர்க்கிறீர்களா?….. உடனே இதை வாங்குங்கள்….. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…..!!!!!


பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை இனங்கள் ஆகியவற்றை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார்கள். அவர்களை தங்களது வீட்டில் ஒருவர் போல் நினைத்து வளர்த்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சிறுபிள்ளை போன்று அந்த செல்லப்பிராணிகளுடன் அவர்கள் விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் ராணிகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால் சிகிச்சை அளிக்க மாநகராட்சி சார்பில் 4 இடங்களில் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து வெறிநாய்க்கடி நோயில்லா சென்னை என்ற இலக்கினை அடைவதற்காக இந்த மையங்களில் அனைத்து செல்ல பிராணிகளுக்கு வெறிநாய் கடி நோய் தடுப்பூசி முற்றிலும் இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சி நிதிகளின்படி செல்லப் பிராணிகளை வளர்க்கு உரிமையாளர்கள் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்த மையங்களில் செல்ல பிராணிகளுக்கான உரிமம் ரூ.50 கட்டணத்தில் வருடத்துக்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த சேவை முழுமையாக பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உங்கள் வீட்டில் நாய், பூனை வளர்க்கிறீர்களா?….. உடனே இதை வாங்குங்கள்….. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…..!!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.