பழிவாங்கும் நோக்கம்…. எரிவாயுவை எரித்து வீணாக்கும் ரஷ்யா…. செயற்கைக்கோள் புகைப்படம் வெளியீடு…!!!


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகளை பழிவாங்கும் நோக்கத்தோடு தினந்தோறும் 8.4 மில்லியன் பவுண்டுகள் மதிப்பு கொண்ட எரிவாயுவை எரித்துக் கொண்டிருப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்களில் தெரிய வந்திருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 6 மாதங்களாக நீடித்துக்கொண்டிருக்கிறது. எனவே, மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை அறிவித்தன. மேலும், எரிவாயுவிற்கு ரஷ்யாவை நம்பியிருந்த நாடுகளில் அதன் விலை அதிகரித்தது.

மேலும், ரஷ்யா ஐரோப்பாவிற்கான நோர்ட் ஸ்ட்ரீம் 1 பைப் லைன்களை அடைத்துவிட்டது. இந்நிலையில், ஒவ்வொரு நாளும் செயின் பீட்டர்ஸ்பெர்க்கிற்கு வடக்கில் இருக்கும் காஸ்ப்ரோமின் அமுக்கி ஆலையில் அதிக அளவில் எரிவாயு எரிக்கப்பட்டு வீணாக்கப்படுவது செயற்கைக்கோள் புகைப்படங்களில் தெரிய வந்திருக்கிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.