உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை….. 22 கிலோ சிக்கன் அழிப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!


இப்போதெல்லாம் நிறைய ஓட்டல்களில் கெட்டுப்போன சிக்கன், மட்டன் போன்ற பொருள்கள் பயன்படுத்துகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்தவர்கள் உணவு அதிகாரிகளிடம் புகார் புகார் அளிக்கின்றனர். இந்த தகவலின் படி உணவு அதிகாரிகள் ஹோட்டல்களில் ஆய்வு செய்கின்றனர். அந்த ஆய்வின் போது அந்த ஓட்டலில் அழுகிப்போன சிக்கன், மட்டன், கெட்டுப்போன உணவுகள் ஆகியவற்றை கண்டுபிடித்து ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் கைது செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் உத்தரவின்படியும், மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுத்தலின்படியும் திருப்பூர் மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் அவிநாசி தாலுகா பைபாஸ் ரோடு மற்றும் மங்கலம் ரோட்டில் செயல்பட்டு வரும் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குளிர்சாதன பெட்டியில் சமைத்த அசைவ உணவு 9 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சமைத்த சுண்டல் மற்றும் சன்னா மசாலா 3 கிலோ தகாத முறையில் சேமித்து வைத்திருந்ததை பறிமுதல் செய்து அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அதிக நிறமிகள் சேர்த்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிக்கன் 22 கிலோ பறிமுதல் செய்து அளிக்கப்பட்டது. புரோட்டா மற்றும் சப்பாத்தி தயாரிப்பதற்கு உரிய முறையில் பராமரிக்கப்படாத மாவு 4 கிலோ பறிமுதல் செய்து அளிக்கப்பட்டது. காலாவதியான காளான் பாக்கெட்டுகள் 2 கிலோ, பழைய காகிதத்தில் வைத்திருந்த வடை, பஜ்ஜி, போண்டா 4 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இதனையடுத்து ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் பொட்டலம் செய்து கொடுத்ததற்காக கடை உரிமையாளர்களுக்கு ரூ.2000 அபதாரம், 4 கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அசைவ உணவகங்கள் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள். உணவு சார்ந்த கலப்படம், தரம் குறைவு போன்ற புகார்களுக்கு 94440 423222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.