உக்ரைனில் கொல்லப்படும் அப்பாவி மக்கள்…. ரஷ்யர்களின் மனநிலை என்ன?… அதிர்ச்சியளித்த வீடியோ…!!!


உக்ரைன் போர், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு மக்களிடையே எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

ரஷ்ய நாட்டில், ஒவ்வொரு நாளும் உக்ரைன் மக்கள் அநியாயமாக கொன்று குவிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஷ்யாவை சேர்ந்த இளம் பெண், நக்கலாக சிரித்திருக்கிறார். அவரைப் போன்றே பல ரஷ்யர்களின் மனநிலை இருக்கிறது. இதே கேள்வியை உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண்ணிடம் கேட்டபோது, தன் மக்களை போரில் இழந்து கொண்டிருப்பதை கண்ணீருடன் கூறியுள்ளார்.

இரு நாட்டு மக்களிடையே உள்ள வித்தியாசத்தை காண்பிக்கும் விதமாக ஒரு வீடியோ ட்விட்டரில் வெளியாகியிருக்கிறது. ரஷ்யாவை சேர்ந்த அந்த இளம் பெண்ணிடம் போர் தொடங்கப்பட்டு  ஆறு மாதங்கள் ஆகின்றன. இதனால் உங்களின் வாழ்வில் ஏதேனும் மாற்றங்களை சந்தித்திருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் சிரித்தவாறு இல்லை என்று கூறியிருக்கிறார். இதற்காக வருத்தப்படுகிறீர்களா? என்ற கேள்விக்கும் சிரித்துக் கொண்டே இல்லை என்று கூறியுள்ளார். அதேபோல் உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணிடம் இதனை கேட்டபோது அவர், என் வீடு மற்றும் சகோதரர்களை இழந்ததாக அழுது கொண்டே கூறியுள்ளார்.

The post உக்ரைனில் கொல்லப்படும் அப்பாவி மக்கள்…. ரஷ்யர்களின் மனநிலை என்ன?… அதிர்ச்சியளித்த வீடியோ…!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.