மீண்டும் சிம்புவும் தனுஷும் மோதலுக்கு தயாராகி உள்ளார்கள்.
தமிழ் சினிமா உலகில் ஒரே காலகட்டத்தில் அறிமுகமானவர்கள் தனுஷ் மற்றும் சிம்பு. இதனால் இருவரும் ரசிகர்கள் மத்தியில் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்பட்டார்கள். ஆனால் சில காலங்கள் கழித்து இருவரும் நண்பர்களாக மாறிவிட்டார்கள். இடையில் சிறு சறுக்கல்களை சந்தித்த சிம்பு மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். தனுஷும் சில படங்கள் தோல்வியடைந்ததால் வெற்றிக்கு காத்திருந்த நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம் மீண்டும் பாதைக்கு திரும்பி இருக்கின்றார். தற்பொழுது இருவரும் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்த வருகின்றார்கள்.
சிம்பு வெந்தது தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தனுஷ் வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சிம்புவின் பத்து தல திரைப்படமும் தனுஷின் வாத்தி திரைப்படமும் ஒரே நேரத்தில் ரிலீசாக இருப்பதாக செய்தி வந்திருக்கின்றது. மேலும் இந்த இரு படங்களும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கின்றதாம். பல வருடங்களுக்கு பிறகு ஒரே சமயத்தில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாக இருப்பதால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது.
The post “மீண்டும் சிம்புவும் தனுஷும் மோதல்”…. கோலிவுட் வட்டாரமே பரபரப்பு….!!!!! appeared first on Seithi Solai.