“வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்”…. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்….!!!!!


வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நடுவில் நிறுத்தப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி புதிய டவுன் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே ஊழியராக கணேஷ் என்பவர் பணிபுரிகின்றார். இவர் தண்டவாள கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொழுது வாணியம்பாடி புதியடவுன் ரயில்வே கேட் பகுதியில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தண்டவாளத்தில் இருந்து அதிகம் சத்தம் கேட்டதால் அப்பகுதிக்கு சென்று பார்த்தபொழுது அந்த இடத்தில் சுமார் ஒரு அடி அளவில் விரிசல் இருப்பதை கண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்து இது குறித்து ரயில்வே மேலாளர் சேகருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அவ்வழியாக வரும் ரயில்களை ஆங்காங்கே நிற்கும்படி கூறினார்கள். பின் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். ஒரு மணி நேரத்திற்கு பிறகு தற்காலிகமாக விரிசல் சரி செய்யப்பட்டது. இதன் பின்னர் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.