பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள்…. விடுதிகளிலும் அரங்கேறும் கொடூரம்…. கலெக்டரின் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!


மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த குற்றங்களை தடுப்பதற்காக அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்து வருகிறது. இருப்பினும் பெண்கள், சிறுமிகள் போன்றவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் நடக்கத்தான் செய்கிறது. அதன்பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக தங்குவதற்கான விடுதிகளிலும் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் விடுதியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக தேனி மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மாவட்டம் முழுதும் உள்ள பெண்கள் தங்கும் விடுதிகள், குழந்தைகள் தங்கும் விடுதிகள், தனியார் பள்ளிகளில் உள்ள விடுதிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள், குழந்தைகள் தங்கும் விடுதிகளை முறையாக பதிவு செய்ய வேண்டும். இந்த விடுதிகள் தமிழ்நாடு சிறார், பெண்களுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். இதனையடுத்து 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு உரிமம் பெற வேண்டும்.

இதேபோன்று 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தாங்கும் இல்லங்கள், விடுதிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு உரிமம் பெற வேண்டும். இதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகள், இல்லங்கள் போன்றவைகளுக்கு மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு உரிமம் பெற வேண்டும். மேலும் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யாவிட்டால் 2 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும், தொடர்ந்து குற்றம் செய்பவர்களுக்கு 1 முதல் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.