மீன்பிடிக்க சென்ற இடத்தில்…. மாயமான மீனவர்…. தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் போலீசார்….!!


படகில் கடலுக்குள் தவறி விழுந்து மாயமான மீனவரை கடலோரம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில் தவமணி என்பவர் இருந்து வருகிறார். இவருக்கு மீனவரான எமில் லாரன்ஸ் என்ற மகன் உள்ளார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மரியபுஷ்பம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரேச்சல், லியான் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக தனபால் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடற்கரையிலிருந்து கேரள மாநிலம் கொச்சின் கடற்கரைப் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.

இந்நிலையில் மீன்பிடித்து விட்டு தருவைக்குளம் கடற்கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது படகில் இருந்து எமில் லாரன்ஸ் தவறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் சக மீனவர்கள் நீண்ட நேரம் எமில் லாரன்சை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் கடற்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி கடலோர காவல்துறையினர் எமில் லாரன்சை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.