தமிழகத்தில் சாரண, சாரணியர் இயக்கம்…. புதிய தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு….!!!!


தமிழக சாரணர் இயக்கத்தின் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக அளவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்களிடம் நாட்டுப்பற்று, ராணுவ கட்டுக்கோப்பு, இறைப்பற்று, அன்பு, கருணை போன்றவற்றை வளர்ப்பதற்காக கடந்த 1908-ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த பேடன் பவல் என்பவர் சாரணர் இயக்கத்தை அறிமுகப்படுத்தினார். இவர் தான் சாரணர் இயக்கத்தின் தந்தை ஆவார். இந்த சாரணர் இயக்கத்தில் இணையும் மாணவர்களுக்கு பொதுநல சேவைகள், கைத்தொழில், நன்னடத்தை, உடற்பயிற்சி மற்றும் தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த சாரணர் இயக்கமானது சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் இந்தியாவில் மாணவர்களிடம் தர்ம சிந்தனை, இறை பக்தி, நாட்டுப் பற்று, நாட்டிற்காக சேவை செய்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த இயக்கமானது நாடு முழுதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கமானது மாணவர்களின் வயது வரம்பை பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தில் உள்ள மாணவர்களுக்கு வருடம்தோறும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாரணர் இயக்கத்தின் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாரணர் இயக்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சாரணர் இயக்கத்தின் மாநில ஆணையாளராக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.