மாநில அளவிலான போட்டி…. சாதனை படைத்த பள்ளி மாணவி…. குவியும் பாராட்டுகள்….!!


மாநில அளவிலான இளையோர் தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சாதனை படைத்த பள்ளி மாணவியை மாவட்ட கலெக்டர் பாராட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 39-வது மாநில அளவிலான இளையோர் தடகள போட்டி நடைபெற்றுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்ட மகளிர் விளையாட்டு விடுதியை சேர்ந்த அபர்ணா என்ற மாணவி கலந்து கொண்டார். இவர் 400 மீட்டர் தடை ஓட்டத்தை 1 நிமிடம் 12 வினாடிகளில் கடந்து 3-ஆம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

இதனை அடுத்து வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழை வென்ற அபர்ணா மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடப்பிரியாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், தடகள பயிற்சியாளர் பத்மநாபன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த மாணவி தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.