கணவரின் கள்ளத்தொடர்பு….. இளம் பெண் இறந்தது எப்படி….?? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…….!!


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் புது தெருவில் வசித்து வருபவர் நடராஜன். இவருடைய மகன் தினேஷ் (27) கடந்த 2 வருடங்களுக்கு முன் கடலூர் மாவட்டம் எள்ளேரி கிராமத்திலுள்ள உறவினர் சச்சிதானந்தத்தின் மகள் வைஷ்ணவியை (24) திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இதில் தினேஷ் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தினேசுக்கும், வைஷ்ணவிக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வைஷ்ணவி திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்கள் மகளின் சாவில் மர்மம் உள்ளதாக கூறினர். அத்துடன் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வைஷ்ணவியை அடித்துகொன்று தூக்கில் தொங்க விட்டதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைஷ்ணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வைஷ்ணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடையார் பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, ஆர்.டி.ஓ. பரிமளம் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின் சமாதானமடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.